யாழ் பொது நூலகத்திற்கு வீணைமைந்தனின் நூல்கள் அன்பளிப்பு

Share

13.03.2024 புதன்கிழமை பி.ப. கனடிய எழுத்தாளர் தரு. வீணைமைந்தன் (கே.ரி.சண்முகராஜா) எழுதிய நூல்களில் 06 படைப்புக்களான:

  • தமிழ் சினிமாவும் நடிகர் திலகமும்
  • மண்ணும் மனசும்
  • மறக்க தெரியாத மனசு
  • தமிழ் சினிமாவில் மஹாகவி பாரதி பாடல்கள்
  • கவியின் காதல் “நாடகம்”
  • வாழ்த்தும் வணக்கமும் “கவிதைகள்”

ஆகிய ஆறு நூல்கள் நூலகப் பிரதம பொறுப்பாளராகிய திருமதி அனுஷ்யா சிவகரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், கனடிய எழுத்தாளரும் கவிஞருமான ஆசிரியர் திரு. க.நவம் அவர்கள் எழுதிய Still I Rise (எனினும் நான் எழுகின்றேன்.) எனும் மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு (ஆங்கிலம், தமிழ்) பிரதியை முன்னை நாள் யாழ் பல்கலைகழக உபவேந்தரும், பேராசியருமான திரு.என்.சண்முகலிங்கன் அவர்களால் நூலக வைப்பிற்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது.

இவ்வைபவத்தில் நூலக ஊழியர்கள் கலந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்களை
வரவேற்று பேசியதுடன் படைப்புக்களுக்கு தனி ஒரு பகுதியை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கூறினார்கள்.

தகவல்: யாழ் உதயன் நிருபர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>