யாழ் மறை மாவட்டத்தில் இடம்பெற்ற இலங்கை கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 79 வது தேசிய இளைஞர் சம்மேளன மாநாடு

Share

(மன்னார் நிருபர்)

(07-05-2023)

இலங்கை கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 79 வது தேசிய இளைஞர் சம்மேளன மாநாடு யாழ் மறை மாவட்டத்தில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை(7) மாலை நிறைவடைந்துள்ளது.

குறித்த தேசிய இளைஞர் சம்மேளனத்தில் இலங்கையின் 12 மறை மாவட்டங்களையும் உள்ளடக்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

-இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்காக நியமிக்கப்பட்ட கொழும்பு துணை மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆரம்பமானது.

யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை,இலங்கை கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் இயக்குனர் அருட்தந்தை பலன பீரீஸ் அடிகளார் மற்றும் மறை மாவட்டங்களில் உள்ள இளைஞர் பணிக்கு பொறுப்பாக உள்ள அருட்தந்தையர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த மூன்று நாட்களும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக குறித்த சம்மேளன நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 120 தமிழ்,சிங்கள இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>