புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாளை முன்னிட்டு, தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், தொலைபேசி வாயிலாக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.