ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைப்பதற்கு யாழ். மக்கள் தயாராக இருப்பதாக அங்கஜன் தெரிவிப்பு!

Share

பு.கஜிந்தன்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவு கோரி 07-09-2024 அன்றையதினம் நெல்லியடியில் அங்கஜன் குழுவினரால் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் ஒவ்வொரு கடை கடையாக சென்று மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை கொடுக்கும் பொழுது மக்கள் ஆதரவுடனும் ஆரவாரத்துடனும் உங்களை வரவேற்கின்றார்கள்.

குறிப்பாக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார்கள். தாங்கள் கடமைப்பட்டிருப்பதாக கூறுகின்றார்கள். இந்த இரண்டு வருடங்கள் கொடுத்த அவகாசமானது தங்களை மூச்சு விடுவதற்கு மீட்டெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஜனாதிபதிக்கு வாக்கினை செலுத்தி, அவரை வெற்றி பெற வைத்து தாமும் வெற்றி பெறுவதற்கு தயாராக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>