ரஷியாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டம்

Share

இந்தியா தனது வான்பாதுகாப்பில் எஸ்-400 வான் பாதுகாப்பை பயன்படுத்தி வருகிறது. சுதர்சன சக்ரம் என்று பெயரிட்ட இந்த வான்பாதுகாப்பு அமைப்பு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வான் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புக்காக ரஷியாவிடமிருந்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தி வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>