ரஷியாவில் கனமழையால் 3.27 லட்சம் பேர் பாதிப்பு; அவசர நிலை அறிவிப்பு

Share

ரஷியாவின் தெற்கே தகேஸ்தான் நகரில் கனமழை பெய்தது. இதனால், நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மகாச்கலா நகர நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதனால் அந்த பகுதியில் 3.27 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 89,700 பேர் குழந்தைகள் ஆவர். இவர்கள் அனைவரும் மின்சாரம் இன்றி பாதிப்படைந்து உள்ளனர் என்று அவசரகால சூழ்நிலைகளுக்கான அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கனமழையால், ரெயில்வே பாலம் ஒன்றும் சேதமடைந்து உள்ளது. இன்றும் கனமழை தொடர கூடும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>