‘ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

Share

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. விரைவில் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செல்கிறார். இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், ஜெர்மன் அதிபர் பிரைட்ரிச் மெர்சும் காணொளி அழைப்பில் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். அப்போது, கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது: “அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னெப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்றுசேர்த்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது. உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புதின் நிறுத்தும் வரை, ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷிய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன.” இவ்வாறு அவர் கூறினார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>