ரஷிய அதிபர் புதினுக்கு திருக்குறள் நூலை பிரதமர் மோடி பரிசளித்தார். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் பெயர்களைக் கொண்டு 2001-ல் ‘பிரிக்’ என்ற பெயர் உருவானது. 2006-ல் அமைப்பு முறையாக உருவெடுத்து, 2009-ல் முதல் உச்சி மாநாடு நடந்தது. தென்னாப்பிரிக்கா இணைந்ததும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பாக பெயர்பெற்றது. பின்னர் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகியவை இணைந்தன. 11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ், அமைப்பில் 2025-ல் பெலாரஸ், நைஜீரியா, உகாண்டா உள்பட 10 நாடுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்த 21 நாடுகள் உலக பொருளாதாரத்தில் சுமார் 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 26 சதவீதத்தையும் கொண்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷிய அதிபர் புதினை டில்லியில் சந்தித்தார். அப்போது புதினுக்கு திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பை பிரதமர் மோடி அன்பளிப்பாக வழங்கினார்.
ரஷிய அதிபர் புதினுக்கு திருக்குறள் நூலை பிரதமர் மோடி பரிசளித்தார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>