ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி ஏன்? டிரம்ப் விளக்கம்

Share

ஈரான் மீதான தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:-ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்ற கச்சா எண்ணெய் விலை உயர்வு மிகச் சிறியது. அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது. கச்சா எண்ணெய் விலை விரைவாக குறையும். குறுகிய கால எண்ணெய் விலைகள் உலகின் அமைதி, பாதுகாப்புக்கு செலுத்தும் மிகச் சிறிய விலையாகும். கச்சா எண்ணெய் விலை குறித்து முட்டாள்கள் மட்டுமே வித்தியாசமாக சிந்திப்பார்கள்.இந்தியா சந்தித்து வரும் அழுத்தத்தை குறைக்கவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க விலக்கு அளித்தேன். இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே இஸ்ரேல் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் டிரம்ப் கூறியதாவது: ஈரான் போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவுடன் பேசிய பிறகு ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும். நாங்கள் பேசிக் கொண்டு இருக்கிறோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவு எடுப்பேன். எல்லா விஷயங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.நானும், இஸ்ரேல் பிரதமரும் ஒன்றாக செயல்பட்டு ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம். இல்லை என்றால் இஸ்ரேலை ஈரான் அழித்திருக்கும். ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை முடிந்த பிறகு இஸ்ரேல் மட்டும் தாக்குதலை தொடர்வதற்கு அவசியம் இருக்குமா என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>