21.08.2020 வெள்ளி தொடக்கம் 27.08.2020 வியாழன் வரையும்
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377
மேஷம் :
பொருளாதாரத்தில் சிறப்பும் வாழ்வாதாரத்தில் பொறுப்பும் சேரக்கூடிய வாரம். வெகுமதி பெருகும். வாகன செலவு ஏற்படும். புதிய நட்பு உருவாகும். உத்தியோகம் இடமாற்றம் ஏற்படும். விருந்தினர்கள் வருகை உண்டு. பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும். குடும்ப அன்யோன்யம் கூடும். உடல்நலனில் அக்கறை தேவை. அடுத்த நபரால் ஆதாயம் உண்டு. திடீர் செலவு ஏற்படும்.
வழிபடவேண்டியதெய்வம்: சுக்கிர பகவான்
அதிர்ஷ்ட எண்: 6, 3, 2, 1; அதிர்ஷ்ட நிறம். சாம்பல் நிறம். அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, L
ரிஷபம் :
பெண்களால் ஆதாயமும் பிள்ளைகளால் பெருமையும் சேரக்கூடிய வாரம். வியாபாரம் லாபம் தரும். உறவினர்களால் உதவி கிட்டும்.உயர்கல்வி ஆர்வம் தேவைகள் அதிகரிக்கும். மற்றவர்களால் அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் கூடும். மங்கள செய்தி வரும். வார்த்தைகளில் ஏற்படும். மாணவர்கள் உற்சாகம் கூடும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். நிதானம் நல்லது.
வழிபடவேண்டியதெய்வம்: மீனாட்சிஅம்மன்
அதிர்ஷ்ட எண்: 9, 6, 4, 7; அதிர்ஷ்ட நிறம். வெண்பட்டு. அதிர்ஷ்ட எழுத்துக்கள். S, H
மிதுனம் :
வருமானமும் வெகுமானமும் அதிகரிக்கக் கூடிய வாரம். யோகமான வாரம். பெற்றவர்கள் பாராட்டு கிட்டும். வினோதமான எண்ணங்கள் விலகும். புதிய முயற்சிகள் பலன் தரும். பிள்ளைகள் தொல்லை அதிகரிக்கும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. புண்ணியஸ்தலம் செல்ல வேண்டி வரும். பழைய நண்பரால் பணவரவு உண்டு.
வழிபடவேண்டியதெய்வம்: சயன கணபதி
அதிர்ஷ்ட எண்: 5, 0, 5, 4; அதிர்ஷ்ட நிறம். அரக்கு. அதிர்ஷ்ட எழுத்துக்கள். H, A
கடகம் :
ஆசைப்பட்ட பொருட்களும் அசையா சொத்துக்களும் சேரக்கூடிய அற்புதமான வாரம். வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும்.கன்னிப் பெண்களுக்கு சுபச் செய்தி வரும். கால்நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். ஆடை, அணிகலன்கள் சேரும். மனச்சஞ்சலம் ஏற்படும். பழைய கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும்.
வழிபடவேண்டியதெய்வம் : மங்கள மாரியம்மன்
அதிர்ஷ்ட எண். 8, 5,1, 3; அதிர்ஷ்ட நிறம். நீலம். அதிர்ஷ்ட எழுத்துக்கள். F, L
சிம்மம் :
எதிர்ப்புக்களால் சிறப்பும், போட்டிகளால் பொறுப்பும் கிடைக்கக்கூடிய சோதனையான வாரம். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். சம்பள பாக்கிகளும் வந்து சேரும். பொருளாதாரம் உயரும். முதலீடு உண்டாகும். தொலை தூர தொடர்பு லாபம் தரும். பாக்கெட்டில் காசு கரையாது. நினைத்தது நடக்கும். பெற்றோர்களால் பாராட்டுப் பெறுவீர்கள். செலவுகள் குறையும்.
வழிபடவேண்டியதெய்வம்: சுவாமி தார்மசாஸ்த்தா
அதிர்ஷ்ட எண்: 2, 4, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்; அதிர்ஷ்ட எழுத்துக்கள் : K, Q
கன்னி :
பாக்கியவான்களின் சந்திப்பால் பணவரவு அதிகரிக்கக் கூடிய பக்குவமான வாரம். மகிழ்ச்சி அதிகரிக்கும் வாரம். விவேகம் அதிகரிக்கும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். கமிஷன் தொழில் திருப்தி தரும். வாகன மாற்றம் உண்டு. தொழில் விருத்தி உண்டு. வரவுகள் திருப்தி தரும். இடமாற்றம் நன்மை தரும். உத்தியோக உயர்வு உண்டு. சச்சரவுகள் அகலும். குடும்ப கௌரவம் உயரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. மறைமுக எதிர்ப்பு விலகும்.
வழிபடவேண்டியதெய்வம்: தேவி காளிகாம்பாள்
அதிர்ஷ்ட எண். 0, 7, 2, 9; அதிர்ஷ்ட நிறம். சில்வர் கிரே. அதிர்ஷ்ட எழுத்துக்கள். D, X
துலாம் :
வீண் வம்புகள் விலகி, வீண் விரயங்களும் குறையக் கூடிய அற்புதமான வாரம். தங்க நகைகள் சேரும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பொருள் இழப்பு ஏற்படும். சகோதரியால் அனுகூலம் உண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு. கலைத்துறையில் திருப்பம் உண்டு. மாணவர்கள் கவனம் தேவை. கடன் சுமை அதிகரிக்கும். காரியத்தடை ஏற்படும். உறவினர்களால் நன்மை உண்டு. எதிரிகளால் தொல்லை உண்டாகும்.
வழிபடவேண்டியதெய்வம்: ஏழுமலை ஆண்டவர்
அதிர்ஷ்ட எண். 2, 1, 0, 8; அதிர்ஷ்ட நிறம். குங்கும கலர். அதிர்ஷ்ட எழுத்துக்கள். R, D
விருச்சிகம் :
திருப்புமுனைகளைச் சந்திக்கக் கூடிய பொறுப்பு மிகுந்த வாரம். பணியில் உயர்வு உண்டு. புதிய பதவிகள் கிட்டும். உடல் நலம் சீராகும். மற்றவரால் பாராட்டுப்படுவீர்கள். புஷ்ப வழிபாடு புண்ணியம் சேர்க்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு. குடும்ப அன்யோன்யம் கூடும். பொறுப்புகள் கூடும். பொருள் வரவு திருப்தி தரும். இடமாற்றம் நன்மை தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: திருமுருகக்கடவுள்
அதிர்ஷ்ட எண்: 1, 2, 6, 9 அதிர்ஷ்ட நிறம்: நீலம்; அதிர்ஷ்ட எழுத்துக்கள் : X, N
தனுசு :
தன்னிகரற்ற தன்மையும், தலைசிறந்த பதவியும் கிடைக்கக் கூடிய தன்மையான வாரம். குதூகலப் பயணம் உண்டு. நிதி நிறுவனம் லாபம் தரும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். இனிக்கும் சம்பவம் அமையும். விவசாய விளைச்சல் அதிகரிக்கும். தொழில் நிம்மதி கொடுக்கும். ஆலய வழிபாடு ஆறுதல் தரும். பெண்களுக்கு யோகம் கூடும். நல்வர் நட்பு உருவாகும். தோல்வி நிலை மாறும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வழிபடவேண்டியதெய்வம்: பஞ்சபூதக்கடவுள்
அதிர்ஷ்ட எண்: 7, 4, 6, 9 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள்; அதிர்ஷ்ட எழுத்துக்கள் : G, C
மகரம் :
விருப்பப்பட்ட திருப்பங்களை பொருத்தமாக சந்திக்கக் கூடிய திருத்தமான வாரம். பொறாமை விலகும். குதுகலம் சேரும். வருமானம் வரும். கல்வி ஆர்வம் கூடும். கட்டிடத் தொழில் லாபம் தரும். பதவி வாய்ப்பு வரும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. பூமி லாபம் உண்டு. தான தர்மங்கள் பலன் தரும். பணவரவு உயரும். பொருளாதாரம் உயரும். மங்கள செய்தி வரும். முயற்சிகள் பலன்தரும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும்.
வழிபடவேண்டியதெய்வம்: நவ தேவதை
அதிர்ஷ்ட எண்: 2 ,4, 6, 8; அதிர்ஷ்ட நிறம்; ஆழ்ந்த வெண்மை, அதிர்ஷ்ட எழுத்துக்கள்; V, U
கும்பம் :
புகழும் புண்ணியமும் கிடைக்கக் கூடிய கண்ணியமான வாரம். குதுகலம் தாண்டவமாடும். ஸ்திர சொத்து சேரும். தெய்வீக ஈடுபாடு வெளிப்படும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். ஆபரணச் சேர்க்கை உண்டு.பயணம் அனுகூலம் தரும். பணவரவு உண்டு. பங்கு சந்தை லாபம் தரும்.முயற்சிகள் பலன் தரும். வெறுப்புகள் அகலும், சிறப்புகள் சேரும். தாய் நலனில் கவனம் தேவை. நிதி பற்றாக்குறை நீங்கும். உடல் சோர்வு ஏற்படும். கல்வி ஈடுபாடு கூடும்.
வழிபடவேண்டியதெய்வம்: வேலவப்பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 7, 3, 5, 2; அதிர்ஷ்ட நிறம்: வாடா மல்லி, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, T
மீனம் :
வருத்தம் இல்லா வாழ்க்கையை பொருத்தமாகச் சந்திக்கக் கூடிய அற்புதமான வாரம். லாபமான வாரம். நிதி நிலமை சீராகும். முயற்சிகள் வெற்றி தரும். நற்காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர்களால் அனுகூலம் உண்டு. அரசு வகையில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். புதிய வாய்ப்பு தேடி வரும். மாணவர் பாராட்டு பெறுவர். சந்தோஷம் பெருகும். ஆபரணச் சேர்க்கை உண்டு. விரும்பிய பொருள் சேரும். வாழ்வில் வளம் உண்டு.
வழிபடவேண்டியதெய்வம்: பிரளய தேவி
அதிர்ஷ்ட எண்: 0, 9, 3, 6; அதிர்ஷ்ட நிறம். அடர்ந்த சிவப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, Z