முன்னாள் ‘ஊழல் ஜனாதிபதி’ மஹிந்தவின் கருத்துக்கு பொது அமைப்புக்கள் கண்டனம்
ந.லோகதயாளன்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளதை பொது அமைப்புக்கள் சில கண்டித்துள்ளன.
இது குறித்து ஊடகங்களிடம் அமைப்பின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போதைய திசைகாட்டி அரசானது ராஜபக்ஷ குடும்பத்தினரைப் பழிவாங்கும் ஒற்றை நோக்கத்துடன்தான் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது என்று அந்த குடும்பமுமே அச்சமடைவதற்கு காரணம் மகிந்தா தொடக்கம் அவரது புதல்வர்கள் மற்றும் சகோதரர்கள் மக்கள் மருமக்கள் என அனைவரும் ஒன்றாக தேசத்தின் சொத்துக்களை கொள்ளஅடித்தவர்கள். கோடிக்கணக்கான ரூபாய் வெளிநாட்டு உதவி நிதியையும் தமது சொந்தத் தேவைக்காக சுரண்டியவர்கள். ஆட்சியில் இருந்த . ஒவ்வொரு நாளும் குறியாகக் கொண்டு மக்கள் பணி செய்வதாக மக்களை ஏமாற்றியவர்கள். எனவே இந்த ஊழல்வா திகளுக்கு ஏதாவதொரு வகையில் தண்டனை நடவடிக்கைகளை அரசு மிகத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
, தற்போதைய கடுமையான பொருளாதாரச் சூழலில் சிக்கியுள்ள நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்கோ மகிந்தா குடும்பம் மற்றும் அவரது சகாக்கள் என அனைவரும் கொள்ளை அடித்த நிதி மீண்டும் திறைசேரிக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட வேண்டும் இதற்கான முறையான நடவடிக்கைகளையும் உடனடியாக திசைகாட்டி அரசாங்கம் எடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு
இந்த நாட்டை கொள்ளை அடித்து வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இனிமேலும் அரசியலுக்கு வர மக்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.