‘ராஜா சாப்’ படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கும் கதாபாத்திரம் பதாகை

Share

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் ‘ராஜாசாப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார். இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜனவரி 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘ராஜாசாப்’ திரைப்படத்தில் மாளவிகா மோகனின் கதாபாத்திரம் தொடர்பான பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பைரவி என்ற கதாபாத்திரல் மாளவிகா மோகனன் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>