ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் தேர்தல் தேதி அறிவிப்பு

Share

மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகி உள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 28-ந் தேதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என ராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>