ராதிகா நடித்த ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

ராதிகா நடித்த ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’. இந்த படத்தை சுங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் டி. சமய முரளி எழுதி இயக்குகிறார். தனது சுங்கத்துறை விசாரணைகளில் கிடைத்த உண்மைச் சம்பவங்களையும், தான் எழுதிய புலனாய்வு நாவலையும் அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.  இப்படத்தில் சரண் சக்தி, ஜே.டி. சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், மைம் கோபி, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், பால சரவணன், ஜாபர் சாதிக், ஸ்மேகா மணிமேகலை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ். ராம்பிரகாஷ், எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டூடியோஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். சாம் டேனியல் இசையமைக்கிறார்.

உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், கடத்தல் உலகின் செயல்பாடுகளையும் சுங்கத்துறை விசாரணைகளையும் மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் வருகிற 30ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்தபடத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவான இந்த முன்னோட்டம் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>