ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் வெளியீடு

Share

மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தேவின் புதிய பாடலான “நா வேற லெவல்” தொகுப்பு சென்னையில் வெளியிடப்பட்டது. இப்பாடலை முன்னணி இசை  நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர்  கிட் சாந்தே. தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு. இந்நிகழ்வில் ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது: இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த சோனி மியூசிக் சௌத் மற்றும் சோனி மியூசிக் மலேசியாக்கு என் நன்றிகள் என்றார். இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது: இது என்னுடைய முதல் இண்டர் நேஷ்னல் பாடல் தொகுப்பு. இந்த வாய்ப்பை வழங்கிய சோனி மியூசிக்கு நன்றி என்றார். சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது: கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும்  நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது.  இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.என்றார். இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>