‘ராமாயணா’ படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது

Share

‘ராமாயணா’ படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் ராமாயணா. 

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தீபாவளி பண்டிகையொட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகும் என ஆங்கில முன்னோட்டத்தில் படக்குழு குறிப்பிட்டுள்ளது. தமிழ் முன்னோட்டம் ஜூலை30ம் தேதி வெளியிடப்பட்டது. படத்தில் ரவி துபே, சன்னி தியோல், அருண் கோவில், லாரா தத்தா, ரகுல் ப்ரீத் சிங், குணால் கபூர், சோபனா ஆகியோரும் நடித்துள்ளனர். பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>