ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படைப்பு, ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார். இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.
ராம்சரண் நடிக்கும் “பெத்தி” படம் குறித்து அவினாஷ் கொல்லா
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>