இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள “ராம் அப்துல்லா ஆண்டனி” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அன்னை வேலாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் அர்னால்ட் , அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா என பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இப்படம் தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் “ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தின் முன்னோட்ட வெளியீடு குறித்த பதிவேற்றம் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் முன்னோட்டம் நாளை வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>