ராம் சரண்- இயக்குநர் சங்கர் கூட்டணியில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் “சிகிரி” பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ‘பெத்தி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில், பெத்தி படத்திற்கான பின்னணி குரல் பணிகளை நடிகர் ராம் சரம் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும், இது தொடர்பான காணொளியும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ராம் சரண் நடித்த பெத்தி படத்தின் புதிய பதிவேற்றம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>