ரிஷப் ஷெட்டியின் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ‘டிசி’ பட நடிகை வாமிகா கபி நடிக்கிறார்

Share

ரிஷப் ஷெட்டியின் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ‘டிசி’ பட நடிகை வாமிகா கபி நடிக்கிறார். இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹனுமான்’. தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்த இப்படத்தில் அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘ஹனுமான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் வர்மா தற்போது ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டியை வைத்து ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். டி-சீரிஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. புராணப் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஹம்பியில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘டிசி’ திரைப்படத்தில் நடித்த நடிகை வாமிகா கபி, ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கதாபாத்திரம் குறித்து வாமிகா கபி மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும், விரைவில் ஐதராபாத்தில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிஷப் ஷெட்டி – பிரசாந்த் வர்மா கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், வாமிகா கபியின் வருகை படத்திற்கு மேலும் கவனம் ஈர்த்துள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>