ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்

Share

ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 112.85 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 710.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>