“ரேனிகுண்டா 2” படத்தின் இரண்டாவது பாடலை அனிருத் வெளியிட்டார்

Share

ரேனிகுண்டா 2” படத்தின் இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவானது. ஜானி, சஞ்சனா சிங், தீப்பெட்டி கணேசன் மற்றும் சனுஷா நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார் .

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ படத்தின் அறிவிப்பு பதாகை சமீபத்தில் வெளியானது. மேலும், இப்படத்தின் முதல்காட்சி பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டார். இதில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இசையில் உருவாகும் இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் விவேகா ஆகியோர் எழுதுகின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை தீப்ஷிகா என்பவர் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், “ரேனிகுண்டா 2” படத்தின் ‘மச்சகல்லி’ இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>