ரொறன்ரொ பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண- 1974ம் ஆண்டு-உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவுகள்- மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தனின் 100 வது ஜனன தினம் தொடர்பான விழாவில் கலந்து கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் முக்கிய பிரதிநிதிகள்

Share

கடந்த திங்கட்கிழமை 15ம் திகதி ரொறன்ரொ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற தமிழ் மொழி சார்ந்த சிறப்பு நிகழ்வொன்றில் கனடாவில் தலைமையகத்தைக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களான அகிலத் தலைவர் நடா ராஜ்குமார் மற்றும் கனடாக் கிளையின் தலைவரும் ஊடகப் பொறுப்பாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவுகளையும் மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் 100 வது ஜனன தினத்தை முன்னிட்டும் அவற்றின் நினைவுகளைப் பகிரும் வகையில் தமிழ் மொழி சார்ந்த செயற்பாட்டாளரும் கணக்காளருமான சிவன் இளங்கோ அவர்கள் தனது குழுவினருடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>