ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் கோவிட்-19 தொடர்பான ‘அபூர்வா’ குறும்படத்திற்கு இரண்டு விருதுகள்

Share

கடந்த 9ம் 10ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற 2023 ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவிற்கான திரைப்படங்கள் திரையிடப்பட்ட முறையில் விழாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களும் தனி ஆளுமைகளும் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு முடிவுகள் எமது உட்பக்கம் ஒன்றில் காணப்படுகின்றன. ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் கனடாவில் தயாரிக்கப்பெற்ற கோவிட்-19 தொடர்பான ‘அபூர்வா’ என்னும் குறும்படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

கோவிட்-19 தொடர்பான குறும்படத்திற்கு இரண்டு விருதுகளை ‘அபூர்வா’ திரைப்படம் தட்டிக் கொண்டது. மேற்படி படத்தின் தயாரிப்பாளரும் வர்த்தகப் பிரமுகருமான திரு ஸ்ரீ நடராஜசுந்தரம். இயக்குனர் செல்வன். பிரவின்த் ரவி அச்சுதன் மற்றும் சிறந்த இளம் நடிகைக்கான விருதினைப் பெற்ற செல்வி ஹம்சா குமார் ஆகியோர் மற்றும் ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் நிறுவனர் செந்தூரன் நடராஜா ஆகியோர் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>