தமிழ்நாடு காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்த அருண் ஐ.பி.எஸ்., கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டார். அதன் பிறகு இப்பொறுப்பை, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யான மகேஸ்வரி கூடுதலாக கவனித்து வந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதவி காலியாக இருந்தது. முக்கியமான ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில் காலியாக இருந்த பதவிக்கு அதிகாரியை நியமிக்க வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 10-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய இயக்குநர் நியமனம் செய்யப்பட்டார். தாம்பரம் காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். சென்னையில் இணை ஆணையர், கூடுதல் ஆணையர் போன்ற முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர் தெற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் பணிபுரிந்துள்ளார். ஆவடி, தாம்பரம் காவல்துறை ஆணையராக அவர் அடுத்தடுத்து பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை ஆலந்தூரில் உள்ள அலுவலகத்தில் பிரேம் ஆனந்த் சின்ஹா முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்று கொண்டார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>