லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது

Share

லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா எல்லையில் லடாக் யூனியன் பிரதேசம் உள்ளது. லடாக்கின் சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என கூறி வருகிறது. இதனிடையே, லடாக்கில் எல்லையில் உள்ள 28 பகுதிகளுக்கு இந்தியா பெயர் சூட்டியுள்ளது. எல்லையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் என மொத்தம் 28 பகுதிகளுக்கு இந்தியா பெயர் வைத்துள்ளது. இதில் கடந்த 2020ம் ஆண்டு சீன படையுடன் இந்திய படையினர் மோதிய இடமும் உள்ளடக்கமாகும். இந்நிலையில், லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், இந்தியாவால் சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா அங்கீகரிக்கவில்லை. அந்த எல்லையில் 28 இடங்களுக்கு பெயர் வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த அறிவிப்பை சீனா வலிமையாக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>