லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தின் முன்னோட்டத்தை சிம்பு வெளியிட்டார். சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை சிம்பு வெளியிட்டுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>