லெஜண்ட் சரவணனின் “லீடர்” படம் 3 நாட்களில் ரூ. 25 கோடி வசூல்

Share

2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார். கடந்த 3ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என ‘லீடர்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ‘லீடர்’ படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>