லோகேஷின் ‘டி.சி.’ படம் முதல் நாளில் ரூ.5.70 கோடி வசூலித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள டிசி படத்தில் அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘டிசி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், வன்முறை நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ டி.சி.’ இந்திய பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வசூலைப் பெற்றுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் நிகரமாக ரூ. 4.1 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியான இந்தப் படம், நேற்று நாடு முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட காட்சிகளில் திரையிடப்பட்டது. இதன் இந்திய வசூல் ரூ. 4.70 கோடியாக இருந்தது, அதே வேளையில் உலக அளவில் வெளியானதில் கூடுதலாக ரூ.1 கோடியை வசூல் குவித்துள்ளது. இதனால் ‘டி.சி.’ படம் முதல் நாளில் ரூ.5.70 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.