லோகேஷ் கனகராஜின் “டிசி” படத்தை சூர்யா பாராட்டினார்

Share

லோகேஷ் கனகராஜின் “டிசி” படத்தை சூர்யா பாராட்டினார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து ‘டிசி’ படம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியானது. ஆக்சன் படமாக வெளியான ‘டிசி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டிசி’ படத்தில் தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷும் சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் பின்னனி இசை மற்றும் பாடல்கள் இப்படத்துக்கு மேலும் வலுசேர்ப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இப்படம் ரூ. 18 கோடி வசூலித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், “லோகேஷ் கனகராஜுக்கும், அருண் மாதேஸ்வரனுக்கும் மனமாரந்த வாழ்த்துகள். அனைவரும் ‘டிசி’ படத்தைப் பற்றி பேசுவதையும் அதனை ரசிப்பதையும் கேட்டு வருகிறேன். அனிருத்தின் சிறந்த இசைக்காகவும் படக்குழுவினருக்காகவும் மகிழ்கிறேன். வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>