லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ படம் ஜூலை 31ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது

Share

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ படம் ஜூலை 31ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ படத்தின் மூலம் கதாநாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகியுள்ளார். இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகையான வாமிகா கபி நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் ‘டிசி’ படம் தொடர்பாக வெளியான காணொளி மற்றும் முன்னோட்டம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது.  இந்த நிலையில், ‘டிசி’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘டிசி’ படம் ஜூலை 31ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>