வங்காளதேச விமான விபத்து – இந்தியா மருத்துவர்கள் குழுவை அனுப்பியது

Share

வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உத்தரா பகுதியில் பள்ளி மீது ராணுவத்தின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 31 பேர் பலியானார்கள். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வங்காளதேசத்துக்கு தீக்காய சிறப்பு டாக்டர்கள், நர்சுக்கள் குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, “தேவையான மருத்துவ உதவியுடன் தீக்காய சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுக்கள் குழு விரைவில் டாக்காவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது. நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள். அவர்களின் ஆரம்ப மதிப்பீடு மற்றும் சிகிச்சையைப் பொறுத்து கூடுதல் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>