வசாவிளான் சுதந்திரபுரம் பகுதியில் மின் கசிவினால் வீடு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது

Share

பு.கஜிந்தன்

தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வசாவிளான் சுதந்திரபுரம் பகுதியில் வீடொன்று மின் கசிவினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று கிடைத்துள்ளது.
இதனால் அயல் வீட்டில் இருந்து வயர் ஊடாக மின்சார இணைப்பினை பெற்றுள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் நேற்று திடீர் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த பொழுதும் வீடு முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மின் கசிவு தொடர்பான தடயவியல் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>