வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார்

Share

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று (21.9.2026) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்திற்கு அதிக மழை தரும் காலமாக வடகிழக்கு பருவமழை காலம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது. இந்த பருவமழை காலத்தில் புயலால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று (செப்.21) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பலவீனமான மின்கம்பங்களை சீரமைத்தல் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>