வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ-வின் தகவலின்படி, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் மற்றுமொரு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கொரிய தொழிலாளர் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 2026 நாடாளுமன்ற தேர்தலில் 99.97% வாக்குகளையும் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன. 15-வது உச்ச மக்கள் பேரவையின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்த தேர்தல் மார்ச் 15-ம் தேதியன்று நடைபெற்றது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்ததாலோ அல்லது கடலில் பணிபுரிந்ததினால் 0.0037% பேரால் மட்டுமே வாக்களிக்க முடியவில்லை, மேலும் 0.00003% பேர் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர். வாக்களித்தவர்களில் 99.93% பேர் வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர், அதேசமயம் 0.07% பேர் எதிராக வாக்களித்துள்ளனர். இது வட கொரியத் தேர்தல்களில் வழக்கத்திற்கு மாறாக கவனிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கையாகும். வட கொரிய தேர்தல் சட்டங்களின்படி, தொழிலாளர்கள், விவசாயிகள், அறிஞர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 687 பிரதிநிதிகள் சட்டபேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்ததால், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இந்த செயல்முறையை ஒரு “காட்சித் தேர்தல்” என்று விவரித்தனர். குறிப்பிடத்தக்க வகையில், 1957ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளதை அந்நாட்டு அரசு ஊடகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங்கும் ஒருவர். இவர் கல்லிம்கில் தொகுதி எண் 5-ல் வெற்றி பெற்றார்.
வடகொரிய தேர்தலில் 99.93% வாக்குகளுடன் கிம் ஜாங் உன் அபார வெற்றி
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>