வடக்கில் கா.பொ.த உயர்தரம் சித்தியடையாத மருத்துவர்கள்!

Share

பு.கஜிந்தன்

வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் க.பொ..த உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிளும் சித்தி அடையாத வைத்தியர்கள் உள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 84 வைத்தியர்களில் இலங்கை மருத்துவ சங்கத்தின் கீழ் பட்டப் படிப்பை பெற்ற 78 பேர் உள்ள நிலையில் 82 பேர் மட்டும் உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்தியர்கள் 136 பேரில் 99 பேர் மட்டும் இலங்கையில் பட்டப்படிப்பை முடித்த வைத்தியர்களாக காணப்படுகின்ற நிலையில் கபொத உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்தவர்கள் விபரம் மறைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 99 வைத்தியர்கள் இலங்கையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த நிலையில் கட்டாயம் கபொத உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்திருக்க வேண்டும் .

ஆனால் வவுனியா மாவட்டத்தில் மீதமுள்ள சுமார் 37 வைத்தியர்களின் பெறுபேறுகள் வெளிப்படுத்தப்படவில்லை.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>