வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

Share

ந.லோகதயாளன்.

வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர்கள் அணரத்த முகாதைத்துவப் பிரிவிற்கு அறிக்கையிட்டுள்ளனர்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 436 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதோடு பலர் இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 536 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 861 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதோடு பேர் இடைத் தங்கல் முகாம்களில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் இடைத் தங்கள் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் ஓரு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 135 குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் 442 பாதிப்படைந்துள்ளதோடு பேர் இடைத் தங்கல் 50 குடும்பத்தைச் சேர்ந்த 153 பேர் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 910 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதோடு 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 547 பேர் இடைத் தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடயாழ்ப்பாணம அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் வவுனியா 87 மாவட்டத்தில் குடும்பங்களைச் சேர்ந்த 324 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதோடு பேர் இடைத் தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமையவே வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>