வடக்கு கிழக்கு மீனவர்களிற்கான சீனாவின் பொருத்து வீடுகள் இரு மாவட்டங்களிற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன

Share

சீன அரசினால் இலங்கையின் வடக்கு கிழக்கு மீனவர்களிற்காக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் அடங்கிய பெட்டிகள் கன்டேனர்கள் மூலம் சில நாட்களுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதில் யாழ்ப்பணத்திற்கு 116 வீடுகளும் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை, கல்முனை ஆகிய ஆறு இடங்களிற்கும் தலா 64 வீடுகள் என்ற அடிப்படையில் இந்த 500 வீடுகளும் கடற்றொழில் அமைச்சினால் பங்கீடு செய்யப்பட்டுள்ளதன.

இவ்வாறு எடுத்து வரப்பட்ட வீடுகள் அனைத்தும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>