வடக்கு பாடசாலைகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் ஊர்காவற்றுறை நம்பாட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு 18 பதக்கங்கள்!

Share

பு.கஜிந்தன்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் ஊர்காவற்றுறை நம்பாட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை 18 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் டென்ஸில் ராஜ் 2 தங்கம் -1 வெள்ளி, கனிமுகிலன் 2 தங்கம் 1 வெள்ளி, கனிஷ்ரா 1 தங்கம், யனுஷன் 3 வெள்ளி, நிஷாந்த் 1 வெள்ளி, 1 வெண்க லம். சனுசா 1 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றினர்.

றிலே நீச்சல் போட்டியில் 14 வயது மற்றும் 16 வயது பிரிவில் ஆண்கள் அணிகள் தலா இரண்டு வெள்ளிப் பதக்கங்களை பெற்றன.

ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களையும் 11 வெள்ளிப்பதக்கங்களையும். 2 வெண்கல பதக்கங்களையும் தம்பாட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை கைப்பற்றி சாதனை படைத்தது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>