(எமது யாழ் செய்தியாளர்)
வடக்கு மாகாண மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர் வரும் 10ஆம் திகதி மீனவர்களை சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சணை தொடர்பில் நேரில் கலந்துரையாட வடக்கு மீனவ அமைப்புக்கள் பல இணைந்து கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு கடிதம் அனுப்புயிருந்தனர்.
அதில் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழில் கூடி மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்பே இவ்வாறு சந்தர்ப்பம்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அவ்வாறு அனுப்பிய கடித்த்திற்கமையவே வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களை ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.
மீனவர்களின் கோரிக்கை ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாகவே ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற நிலையில் அதற்கான பதிலும் தற்போது அதே நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இச் சந்திப்பில் வடக்கின் 4 மாவட்ட பிரதிநிதிகளும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.