வடமாகாணத்தின் 18 மனித நேய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Share

(மன்னார் நிருபர்)

(24-2-2023)

வடமாகாணத்தில் மக்களுக்கான மனித நேய பணியாற்றி வருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(24) மாலை இடம் பெற்றது.

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வில் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மனித நேயத்தோடும் அர்ப்பணிப்போடும் தமது கடமைகளை வகைப்பொறுப்போடு முன்னெடுத்து வரும் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர் .

வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 18 ஊடகவியலாளர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் ,முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன்,கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடகவியலாளர் கதிரவேலு இரவீந்திரராசா , மன்னார் மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான றொசேரியன் லெம்பேட் மற்றும் யூட் பெலிஸ்டஸ் பச்சேக் ,யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான தம்பித்துரை பிரதீபன் ,முருகப் பெருமான் மதிவாணன், விஜயகுமார் லோஜன், இளயகுட்டி சாரங்கன், நடராசா குகராஜ், தங்கவேல் சுமன், கந்தசாமி பரதன், சுமித்தி தங்கராசா, சோபிகா பொன்ராஜ் ,தங்கராசா காண்டீபன் ,இந்ரபாலா வினோஜித் , குமாரசாமி செல்வக்குமார், சிங்காரவேலு நிதர்சனம், ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>