வடமாகாண பொறியியலாளர்களால் 600 குடும்பங்களுக்கு உலர்உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பெற்றன!

Share

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 300 குடும்பங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் 250 குடும்பங்களுக்கும் முல்லைத்தீவில் 50 குடும்பங்களுக்குமாக சுமார் 600 குடும்பங்களுக்கான பொதிகள் சில நாட்களுக்கு முன்னர் வழங்கி வைக்கப்பட்டன என்பதும் வடக்கு மாகாணத்தில் புத்திஜீவிகன் தங்களுக்குள் திட்டமிட்டு மக்கள் நலனை காப்பது.தொடர்பாக சிந்தித்து செயலாற்றுவதையும் மறுபக்கத்தில் செல்வந்தர்களாக மாளிகைகளில் வாழும் முன்னாள் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் எவரும் இவ்வாறான மக்கள் நலன் சார்ந்த பணிகளை ஆற்றாமல் வீடுகளுக்குள் அடங்கிக் கிடப்பதையும் மக்கள் கேள்விகளாக முன்வைத்துள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>