வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக சிவஞானபோதம் தனஞ்சயன் 13 ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் குறித்த கல்லூரியில் கடந்த காலங்களில் ஆசிரியர், பிரதி அதிபர், அதிபர் ஆகிய பதவிகளை வகித்து, பின்னர் வெளி மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதன்பின்னர் யாழ்ப்பாணம் . இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராக கடமை புரிந்தார்.
இவ்வாறான பின்னணியில் மீண்டு வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்ட நிலையில் 13 ம் திகதி அன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இதற்கு முன்னர் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி அங்கு ஒழுக்கம், கல்வி ஆகியவ;றறை சமாந்தரமாகப் பேணுவதில் அக்கறையாகவும் பாடகாலையின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றியவர் என்றவகையிலும் சிறப்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.