“வட மாகாணத்திலிருந்து எமது கட்சியின் சார்பாக மக்கள் தேர்ந்தெடுத்த பாராளுமன்ற மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உழைக்கும் குடும்பங்களின் பிரதிநிதிகள் ஆவார்கள்!”

Share

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதின விழாவில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க உற்சாகமாகத் தெரிவிப்பு.

மேறப்டி கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் அழைக்கப்பெற்ற ‘கனடா வாழ்’ பாஸ்டர் சோதி அவர்கள்

” அண்மையில் ;நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வட மாகாணத்திலிருந்து அண்மையில் எமது கட்சியின் சார்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் உழைக்கும் குடும்பங்களின் பிரதிநிதிகள் ஆவார்கள். அவர்கள் எவரும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அல்ல. அத்துடன் அவர்கள் அனைவரும் வறிய மற்றும் நடுத்தர மக்களின் துன்பங்கள் துயரங்கள் நிறைந்த வாழ்க்கை பற்றி அறிந்தவர்கள். அவர்களால் மாத்திரமே உங்களைப் போன்ற அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை அறிந்தும் உணர்ந்தும் அவற்றிக்கான தீர்வுகளைக் வழங்க முடியும்!”

இவ்வாறு கடந்த 01-05-2026 அன்று சுமார் 2000 பார்வையாளர்கள் கலந்து கொண்டு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதின விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்னாயக்க உற்சாகமாகத் தெரிவித்தார்.

மேறப்டி கூட்டத்தில் கலந்து கொண்ட ‘கனடா வாழ்’ பாஸ்டர் சோதி அவர்கள் மேடைக்கு அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோரால் அழைக்கப்பெற்று அமைச்சர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்றார்.

அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள் பாஸ்டர் சோதி அவர்களிடம் உரையாடியபோது “கனடா வாழ் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்” என்றும் வேண்டிக் கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்த்ககது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>