வணிகப் பிரிவில் 2இடம் பெற்று யாழ்ப்பாணத்தில் சாதனை படைத்த சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் மாணவி முகுந்தினி!

Share

பு.கஜிந்தன்

வெளியாகிய 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் மாணவியான முகுந்தினி பிரான்ஸிஸ் தேவநாயகம் அவர்கள் வணிகப் பிரிவில் மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில்,

2023ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாமிடத்தை பெற்றுள்ளேன். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அம்மா, அப்பா, அதிபர், ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாடசாலையிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் நான் படிக்கின்ற பாடங்களை உடனுக்குடன் மீட்டல் செய்வேன். அப்படி படித்ததால் பரீட்சைக்கு சொல்லும்போது அதிக சுமையாக இருக்காது. எனக்கு விளங்காத பாடங்களை நிகழ்நிலை காணொளிகளை (online videos) பார்த்து விளங்கிக் கற்பேன்.

சிறந்த ஒரு கணக்காளராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்வதும், எனது பெற்றோரை மிகவும் சந்தோஷமாகவும் கவனிப்பதுமே எனது இலக்கு என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>