வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர் திருவிழா

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(21-05-2024)

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது.

இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி ,வெளி வீதி உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தேரில் ஆரோகணித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க பஞ்சரத பவனி இடம் பெற்றது.

தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு,தேரில் பச்சை சாத்தப் பட்டதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் ஆலயத்தில் எழுந்தருளினார்கள்.

நாளைய தினம் தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>