வள்ளலார் வழியில் தொடர்ந்து பயணிப்போமென முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்

Share

அன்பு, கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் வழியில் தொடர்ந்து பயணிப்போமென முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். வள்ளலார் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வள்ளலார் பிறந்தநாள் தமிழக அரசால் “தனிப்பெருங்கருணை நாள்” என அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், வள்ளலார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் பிறந்த இந்நன்னாளில், அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன். பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலார் அவர்களின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன. உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிப்போம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>