வழக்கறிஞர் சங்கத் தலைவராக ஆர்.சி.பால் கனகராஜ் பொறுப்பேற்பு – நயினார் நாகேந்திரன் வாழ்த்து

Share

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் ஆர்.சி.பால் கனகராஜுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சிறந்த தலைமையும் வழிகாட்டுதலும் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மேலும் பல சாதனைகளைப் படைத்து, புதிய உயரங்களை எட்டும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>