வவுணதீவில் வயல் நிலத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன!.

Share

((கனகராசா சரவணன்)

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்களை 14 ம்திகதி அன்று செவ்வாய்க்கிழமை (14) நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையின் வெடிக்கவைத்து அழித்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வயலில் சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை வேளாண்மை நடவடிக்கைக்காக வயலின் உரிமையாளர் உழவு இயந்திர மூலம் நிலத்தை பண்படுத்தும் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

இதையடுத்து பொலிசார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவு வரவழைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள் , ஒரு ஆர்.பி.ஜி. குண்டு, மற்றும் பிளாஸ்டிக் கான் ஒன்றில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்களை நீதிமன்ற உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் வைத்து வெடிக்க வைத்து அழித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதேவேளை குறித்த பிரதேசமானது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>