கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த வாகா எல்லை குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பான குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் கைதான 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 300 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு மனு லாகூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், கைதானவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>